Saturday, November 16, 2019

Keezhanelli herbal medicine

மருத்துவ குணங்கள்தொகு

மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில் கீழாநெல்லி பயன்படுகின்றது.கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி, பூமியாமலக், பூளியாபாலி என்று பல்வேறு பெயர்களால் மருத்துவர்களால் அழைக்கப்படும் கீழாநெல்லி தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தானாகவே முளைத்து செழித்து வளர்ந்திருக்கும் கற்ப மூலிகை ஆகும்.
உட்கொள்ளும் முறை: முழுக் கீழாநெல்லிச் செடியைத் தூயநீரில் கழுவி அரைத்துக் கொள்ளல் வேண்டும்.ஐம்பது கிராம் அளவுள்ள விழுதை 200 மி.லி.எருமைத் தயிருடன் கலந்து, காலை 6 மணியளவில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் தவிராமல் உட்கொண்டால் மஞ்சட்காமாலை நோய் குணமடையும்.மருந்துண்ணும் நாட்களில் மோரும்,மோர்ச்சோறும் உட்கொள்வது நல்லது. கீழாநெல்லி இலைகளக் கற்கண்டுடன் சேர்த்து அரைத்து மூன்று கிராம் அளவு காலை மாலை இருவேளையும் நான்கு நாள் தொடர்ந்து உட்கொள்ள சிறுநீர்த் தொடர்பான நோய்கள் தீரும்.


Friday, October 19, 2018

Trust your mind,body,soul

www.supremeholisticinstitute.com

*உடல் இயக்க தத்துவம் :*

ஒருவர் தவறான , கெட்டுப் போன  உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.

தொண்டை வரைக்கும்  அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗

1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.
அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.
வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.


அது தவறு

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயண வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் இயக்கம் , எதிர்ப்பு சக்தி  முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை இயற்கைச் செயல்!

மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி கொண்டு செல்லும் !

உடல் இயக்க தத்துத் தை  புரிந்துக்கொள்ளுங்கள்!
✨💫Sri Aadhi Shiva Guruvey Namo Namaha 🔥🌍

Tuesday, October 16, 2018

Namasivaya Mantra Eternal Miracles

www.supremeholisticinstitute.com

#ஈசனின் #மந்திரங்கள்..
உச்சரியுங்கள்..
வளமான வாழ்விற்கு வழி
வகுத்திடுங்கள்..!!

நமசிவாய ' என்ற நாமம் உச்சரிக்க அமிர்த வச்சிரம் ஏற்படும்.

'நமசிவாய ஊம் நமசிவாய' என்று உச்சரித்தால் பதினெட்டு வகை சுரமும் தீரும்.

'நமசிவயங் செலகை நமசிவாய' என மந்திரம் உச்சரித்தால் அறுபத்தி நான்கு பாஷானங்களினால் ஏற்படும் விஷங்களும் தீரும்.

'நமசிவாயம் லங்க நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தால் பூமியில் மழை பொழியும்.

'சவ்வும் நமசிவாய நமா' என்று உச்சரித்தால் அரச போகம் கிட்டும்.

'ஶ்ரீயும் நமசிவாய நமா' என்ற மந்திரத்தை ஓதினால் கள்ளர்கள் வரமாட்டார்கள்.

'ஊங்கிறியும் நமசிவாய நமா' என்ற மந்திரத்தைச் சொன்னால் மோட்சம் கிடைக்கும்.

'அலங்கே நமசிவாய நமோ' என்ற மந்திரத்தைச் சொன்னால் புகழ் மற்றும் பெருமை உண்டாகும்.

'வநம சிவாய' என்று செபித்தால் தேக சித்தி உண்டாகும்.

'ஓம் நமசிவாய' என்று செபித்தால் காலனை வெல்லலாம்.

'லங்கிரியும் நமசிவாய' என்று உச்சரித்தால் தானியங்கள் பெருகி வளரும்.

'ஓங்கிறியும் ஓம் நமசிவாய' என்று சொல்லி வந்தால் வாணிபங்கள் நன்றாய் நடக்கும்.
'ஓங் ஊங் சிவாய நம உங்நமா' என்ற மந்திரத்தை உச்சரித்தால் பதினெட்டு வகையான குட்டமும் தீரும்.

'லீங் க்ஷும் சிவாயநம' என்ற மந்திரம் உச்சரித்தால் பெண்கள் வசியம் ஏற்படும்.

'லூங் ஓங் நமசிவாய' என்று ஓதினால் தலையில் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தீரும்.

'ஓங் அங்கிஷ சிவாய நமா' என்று ஓதினால் பூமியெங்கும் சஞ்சாரம் செய்யலாம்.

'அங் சிவாய நம' என்று உச்சரித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

'அங் உங் வங் சிவாய நம' என மந்திரம் உச்சரிக்க உடலில் உண்டான நோய்கள் தீரும்.

'ஹம் ஹம் சிவாய நமா' என்று உச்சரித்தால் யோக சித்தி உண்டாகும்.

'ஓம் நமசிவாய நமா' என்ற மந்திரத்தை செபித்தால் பூத கூட்டங்கள் வசமாகும், துஷ்ட தேவதைகள் அழியும்.

'சிலியும் நம சிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தால் மன்னர்கள் வசியம் ஏற்படும்.

☀🔥Om Aadhi Shiva Guruvey Namo Namaha 🌟 🌠🌈 🌍

Vedicwellness.org

Venkadugu secrets and it's miracle positive properties

www.supremeholisticinstitute.com

வெண்கடுகு

''வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவ கணம் ஆகும்.
வெண் கடுகை குறித்த ஒரு கதையைப் படியுங்கள். அதன் சக்தி புரியும். மகத நாட்டை ஆண்டு வந்த மயில்வண்ணன் என்ற மன்னன் பெரும் கொடையாளி. மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வந்தான். ஆகவே அவனது புகழ் எங்கும் பரவி இருந்தது. அவன் மீது பொறாமைக் கொண்ட விரோதிகள் அவன் மீது தீய ஏவல்களை ஏவி விட்டார்கள். அதனால் நாளடைவில் அவனால் எதையும் சரிவர யோசனை செய்ய முடியாமல் தத்தளித்தான். அவன் குடும்பத்திலும் அமைதி குலைந்தது. ஆகவே அவன் தனது ராஜ குருவை அழைத்து தன்னுடைய சங்கடங்களைக் கூறி அதற்குப் பரிகாரம் கேட்டான். ராஜகுருவும் அவனுக்கு ஒரு விசேஷ பூஜையை செய்யுமாறு அறிவுரை செய்தார்.
அதன்படி ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என்றும் கூறினார்.
எதற்காக பாத பூஜையிலும் சாம்பிராணிப் புகையிலும் வெண் கடுகை பயன்படுத்த வேண்டும் என்று மன்னன் கேட்க ராஜ குரு கூறினார் ' மன்னா, வெள்ளைக் கடுகுச் செடிகள் குளிர்ச்சியை தருபவை. அவை இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும். பிரபஞ்சத்தின் அனைத்து தீய சக்திகளைளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர் ஆவார். ஆகவே வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும்.
சாதாரணமாக ஸூதர்சன ஹோமங்களில் ஓதப்படும் மந்திரங்களில் சர்வ சத்ரு நாசன மந்திர உச்சாடனமான ஓம் க்லீம் க்ருஷ்ணாய என்று துவங்கும் வார்த்தைகள் வலிமை மிக்க மந்திர ஒலிகள். அதை ஓதும்போது பகவான் விஷ்ணுவே ஸூதர்சனராக வந்து சத்ருக்களை அழிப்பார். அப்படிப்பட்ட ஹோமத்தில் வெண்கடுகை ஸமித்து ஹோமம் செய்யும் போது சர்வ சத்ருக்களும் அவர்களுடன் சேர்ந்த தீய ஆவிகளும் அழிவார்கள்.
அது போலவே போர்களில் அடிபட்டு இறக்கும் தறுவாயில் உள்ள வீரர்கள் பூமியில் கிடக்கும்போது அவர்களை சுற்றி உள்ள இடங்களில் வெண்கடுகைத் தீயிலிட்டுப் புகையை உண்டாக்கினால் யம பகவான் அவர்களின் உயிர்களை பறிக்க வர மாட்டார் என்ற நம்பிக்கை சங்க காலங்களில் இருந்துள்ளது. அதற்குக் காரணம் வெண்கடுகுப் புகை ஸூதர்சனார் வருகை தரும் நிலையைக் குறிப்பதாகும் . ஆகவேதான் வெண் கடுகு கடவுள் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது'
தனது ராஜ குரு கூறியதைப் போலவே மன்னன் மயில்வண்ணன் வெண் கடுகைப் போட்டு பூஜையும், யாகமும் செய்ய அனைத்து தீய ஆவிகளும் வீட்டை விட்டு வெளியேறின. அவர் குடும்பத்தில் மீண்டும் அமைதி ஏற்பட்டது. செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.  வெண்கடுகு,மருதாணி விதை,சாம்பிராணி,வில்வ இலை பொடி,வேப்ப இலை பொடி,அருகம்புல் பொடி,குங்கிலியம்பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.  இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. குங்கிலியம்,  சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள  பொருட்களுடன் சேர்த்து  கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும்.  தி்னமும் செய்தால் தவறில்லை.  48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும்.  ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.  குடும்பத்தில் அமைதி உண்டாகும்.  குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும்.  லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

🔥☀Om Aadhi Shiva Guruvey Namo Namaha 🌈 ⛅🌎☀

Vedicwellness.org

Secrets revealed about lamping with oils

www.supremeholisticinstitute.com

கலப்பு எண்னைய் தீபம் வேண்டாம் அது தீமையை தரும் அன்பர்களே!

1,#ஐந்துஎண்ணெய். மூன்று எண்ணெய் கூட்டி விளக்கேற்றினால் நல்லது என்று வரும் செய்திகளை நம்பி அப்படியே தவறு செய்யும் அப்பாவி மக்கள் கவனத்திற்கு அறிக,
         

எப்பொழுதுமே ஒரு எண்ணெய்யுடன் இன்னொரு எண்ணெய் சேர்ந்து எரியக்கூடாது

அதர்வன  மாந்திரிகத்தில் அசுப நிகழ்வுகளை தன் விரோதிக்கு ஏற்படுத்த தந்திரமாக கையாண்ட முறைதான் கூட்டு எண்ணெய் தீப வழிபாடாகும் . அதே போல் தன் குறைதீரவும். கடுமையான பிரச்சினைகள் விலகவும் பல எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றும் வழக்கமும் இருந்தது, இந்த வழக்கம்தான் இன்று தவறாக கையாளப்படுகிறது,

விளக்கமாக அறிவீராக,

பௌர்ணமி கழித்து வரும் அஷ்டமி தேய்பிறை அஷ்டமி என்று அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்த அஷ்டமி கார்த்திகை மாதத்தில் வரும் போது பஞ்ச எண்ணெய் தீபம் கால பைரவருக்கு ஏற்ற வேண்டும்,

இதற்கு பஞ்ச (5) தீபம் என்று பெயர், 5 வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும், 5 தனி தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும், ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடபாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும்,

இந்த முறை பிரச்சினைகளுக்கான தீர்வு மட்டுமே, பில்லி சூன்யம். வம்பு. வழக்கு. தீரா நோய் இவைகள் அடங்கும் .

அடுத்து ஒவ்வொரு செவ்வாய்கிழமை காலையும். மாலையும் ஸ்ரீ கால பைரவரை அஷ்டலட்சுமியும் வழிபடுவார்கள், அந்த நேரத்தில் கடன் தீரவும். செல்வம் பெருகவும் நாமும் இரு அகலில் நெய்தீபம் ஒன்றிலும். நல்லெண்ணெய்  ஒன்றிலும் ஊற்றி சிவப்பு திரி போட்டு தனித்தனியே ஏற்றினால் கஷ்டங்கள் தீரும்,

நவகிரக தோஷம் விலக அரசடி விநாயகருக்கு சதுர்த்தி திதி அல்லது ஞாயிற்றுக்கிழமை மூன்று அகலில் ஒவ்வொன்றின்  வீதம் தேங்காய் எண்ணெய். நல்லெண்ணெய். பசு நெய் இவைகளை தனித்தனியே ஏற்றி வழிபட கிரக தோஷம் விலகும் .

அடுத்து சித்திரை. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமையில் ராகுகால வேளையில் சிவாலயத்தில் உள்ள அன்னை துர்க்கைக்கு 9 அகலில் 9 வகை எண்ணெய் தனித்தனியே ஊற்றி 9 வகை கலர் திரி ஒவ்வொன்றிலும் ஒரு கலர் திரி வீதம் போட்டு தீபம் ஏற்றி அன்னையை வழிபட தீரா பிரச்சினையும் தீரும்,

இவ்வாறு பல செயல்களுக்கும் இந்த பல வகை எண்ணெய் தீபம் ஏற்றும் முறை உண்டு, ஆனால் இன்று இந்த நல்முறை அறியாததால் தவறு நடக்கிறது,

5 எண்ணெய் கூட்டி தீபம் ஏற்றுங்கள் என அக்காலத்தில் சொன்னது தவறாக செய்தி பரவிவிட்டது, 5 எண்ணெய்ûயும் ஒன்றாக கலந்து தீபம் ஏற்றுவது என தவறாக புரிந்து பாதகத்தை அறியாமலேயே பெருகிறார்கள்,

(அறியாமல் செய்தால் தவறில்லை என்ற மன ஆறுதல் பேச்சு இதில் செல்லாது, விஷம் என்று அறியாமல் நாம் எடுத்து குடித்தால் அது உடலில் பரவாமல் இருக்காது, அதை போலத்தான் தெய்வ சபையும், தெரிந்தோ தெரியாமலோ செய்தாலும் குற்றம் குற்றம்தான், அதனால்தான் ஆன்மிகத்தை பொருத்தவரை தெரியாததை புதிதாக செய்யக்கூடாது என்பார்கள்,) ஆக தீபத்திற்கான எண்ணெய் கலப்படமாகாமல் ஏற்றுவதே சிறந்தது .

எதிரியை உறவாடி கெடுக்கும் முறை ஒன்று உண்டு .இது அதர்வன முறையில் நிறையவே உண்டு, சூழ்ச்சி. தந்திரம் இவைகளை எதிரி அறியாமல் செயல்படுத்துவதாகும் மூலிகை. யந்திரம். எண்ணெய். மந்திரம் இவைகளில் ஒன்றுக்கொன்று எதிர்ப்பு எதுவென்று அறிந்து அதை சேர்த்து தன் விரோதிக்கு நல்லது என கொடுத்து பயன்படுத்துவார்கள்,

அது என்னவென்று தெரியாமலேயே பயன்படுத்தும் அப்பாவிகள் அதன் விளைவை சந்திக்க வேண்டியதாகிறது . அக்காலத்தில் இதே முறையில் உறவாடி கெடுத்தவர்கள் ஏராளம், அந்த முறையில் ஒன்றுதான் இந்த கூட்டு எண்ணெய் முறை பயன்படுத்தப்பட்டதாகும் .

இந்த முறையை அறிந்தவர்கள் அதன் பலனை அறியாமல்
செய்திகளை வெளியிட்டு மக்களும் அதை பின்பற்றி துன்பப்படுகிறார்கள், அப்படி என்னதான் துன்பம் என்று சந்தேகம் உண்டாகிறதல்லவா ? அதையும் அறியுங்கள்

ஸ்லோ பாய்சன் என்ற கேள்விப்பட்டிருப்பீர்கள் அது மனிதன் அறியாமலேயே கொஞ்ச கொஞ்சமாய் கொல்வதாகும், அதே போல் இந்த எண்ணெய்களை ஒன்றாக கலக்கி தீபம் ஏற்றினால் அதன் விளைவு இதனால்தான் உண்டானது என சந்தேகப்படா வண்ணம் நடக்கும்.

அந்த செயல் என்னென்ன என்று அறியுங்கள், குழந்தைகளுக்கு முறை தவறிய திருமணம் நடக்கும். இது கலப்பு கல்யாணமாகவும் இருக்கும்,

காதல் திருமணமாகவும் இருக்கும். பெண்ணுக்கு வயது கூடி ஆணுக்கு குறைந்தும் நடக்கும், திருமணத்தில் நம்பி மோசம் போகும் சம்பவங்கள் நடக்கம். இதில் எது வேண்டுமானாலும் நடக்கும், அடுத்து குடும்பத்தில் நம் விருப்பத்தோடு உறவுகள் விலகல் உண்டாகும், கலகங்கள் உண்டாகும், திடீர் என பொருள் களவு போதல் உண்டாகும். திடீர் அறுவை சிகிச்சை கொடுக்கும், இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்,

அதிலும் குறிப்பாக மேற்கண்ட நிகழ்வுகள் யாவுமே நமக்கு நல்ல நேரம் காலம் என்று எப்போது ஜோதிடம் காட்டுகிறதோ அப்போதுதான் நடக்கும், வழிமுறை தெரியாமல் அகப்பட்டுக் கொண்ட மக்கள் பின்னாளில் துன்பப்படும்போது இதனால்தான் நமக்கு நடக்கிறது என்று அறியாமல் விழிப்பார்கள்,

ஜோதிடத்தில் நன்றாக இந்த ஆண்டு இருக்கும் என்றார்களே ஆனால் இந்த ஆண்டுதானே கஷ்டப்படுகிறேன் அவ்வாறெனில் ஜோதிடம் தெய்வம் பொய்யா என கேள்வியும் கேட்பார்கள்

இவ்வாறு கேட்பவர் குடும்பம் இப்படி ஏதாவது ஒரு தவறை செய்து அகப்பட்டுக் கொண்டவர்களாக இருப்பார்கள் . எத்தனையோ வழிமுறையில் தவறுகள் நடந்தாலும் அதில் இந்த கலப்பு எண்ணெய்யாலும் தவறு நடப்பதால் சுட்டி காட்டினோம் .

கலப்பாக எண்ணெய் கூட்டி ஏற்றும் போது அப்போதைக்கு செயல் நடந்தார் போல் இருக்கும் அது மட்டும் தான் நமக்கு தெரியும் ஆனால் அதன் எதிர்மறை பலன் மேலே கூறியிருந்தார்போல் நடக்கும் .

10 ஆண்டுகள் யாம் இதற்காக எடுத்துக் கொண்ட ஆய்வில் சுயமாகவே அறிந்தே கூறியுள்ளேன், அதே நேரத்தில் இக்கருத்தை ஆய்வு செய்தேனே தவிர இதை அக்காலத்திலேயே தெளிவாக கூறிச் சென்றுள்ளார்கள், நமக்கு முறையாக தெளிவாக கூற இன்று யாரும் இல்லாததால் நல்லது கெட்டது அறிய முடியாமல் போகிறது, மீண்டும் அக்காலம் போல் ஆய்வு செய்து தெரிந்து கொள்ள வேண்டியதாகிறது .

ஒரு ரகசியத்தை அறிக

அக்காலத்தில் காளி அம்மன் அருளை பெறவும் கடினமான பிரச்சனைக்கு உடனே தீர்வு காணவும் 5 எண்ணெய் கூட்டி புது அகலில் தீபம் தனி அறையில் ஏற்றி அங்கு அண்ணம் தண்ணீர் எதுவுமின்றி மௌனமாய் மூன்று தினம் விரதமிருந்து தீப வெளிச்சத்தை தவிர பிற வெளிச்சமும் காணாமல் அம்மனை மனதிலே பூஜித்திருந்தால் அம்மன் கோரிக்கையை நிறைவேற்றி கொடுப்பாள் விரைவில் தீர்வுகிடைக்கும் . இந்த முறையை இன்றைக்கும் கடைபிடிக்கலாம் . வேறு மார்கத்தில் 5 எண்ணெய் கூட்டி திபம் ஏற்றினால் பஞ்சமே உண்டாகும்.

☀🔥Om Aadhi Shiva Guruvey Namo Namaha 🌟 🌈⛅ 🌎

Vedicwellness.org

Tuesday, September 18, 2018

Sanatana Dharmam is Great Eternal wisdom



*புரட்டாசி மாசம் ஏன் கறி திண்பது கூடாது, ஆன்மீகமும் அறிவியலும் கலந்த உண்மை.*

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். இதற்கு என்ன காரணம் என்பதை பற்றி பார்க்கலாம்.

ஜோதிடத்தில் 6வது ராசி கன்னி.கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம்.
புதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதாலல் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.

புரட்டாசி மாதம் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும் மேலும் பூமியின் இயக்கத்து படி நமக்கு செரிமானக்குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் ஆதலால் அசைவ உணவை தவிர்த்து, உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள்.

தமிழ் மாதங்களில் புரட்டாசி என்பது வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. பல மாதங்களாக, வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து, புரட்டாசி மாதத்தில்தான் வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
இதனால், அந்த மாதத்தை சூட்டை கிளப்பிவிடும் காலம் எனக் கூறுவார்கள்.

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கினர் நம் முன்னோர். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.

துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் தருவதையும் நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. இந்த மாதிரியான காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது.

புரட்டாசி மாதம் என்பது புதனுடைய வீட்டில் சூரியன் இருக்கக்கூடியது. புதன் என்பது ஒரு சாத்வீகமான கிரகம். செளமியன் என்று புதனைக் குறிப்பிடுவது உண்டு. செளமியன் என்றால் சாது. சாத்வீகமானவர், அதிர்ந்து கூட பேசமாட்டார் என்று சொல்வார்களே, அதுபோல.
புதனுடைய உணவு என்று எடுத்துக்கொண்டால், அது உப்பு சப்பு இல்லாத உணவுதான். துவர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளெல்லாம் புதனுடைய உணவு. இந்த புதனுடைய உணவாக அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், பிரசாதங்கள் இதுபோன்ற உணவுகளெல்லாம்தான் புதனுக்கு வரும். அதனால்தான் அந்த மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகிறது....

www.supremeholisticinstitute.com

Sunday, September 16, 2018

அகத்தியர் அருளிய மந்திரம்.

அகத்தியா்அருளிய உடல்நோய்கள்அனைத்தையும்  முற்றிலும் நீக்கும்இம்மந்திரத்தினை  ஜெபித்து நோய்களினின்றும்   விடுதலைப்பெற்று  மகிழ்வுடன்வாழ்வோமே.......

கணபதி மந்திரம் ...

ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று
தாமப்பா நடனகண பதிதானொன்று
சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க்கேளு
நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே.
ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
உத்தமமே உக்கிரகண பதிதானொன்று
நன்றான மூலகண பதிதானொன்று
நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க்
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன் குணமாய்க்கேளு
நின்றாடு மூலமடா ஆதிமூலம்
நிலையறிந்து

ஓம்கிலி அங்உங்கெண்ணே

ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார். இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது

“ஓம் கிலி அங் உங்”

என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்தி பலனடைய வேண்டும் என்பதை பின் வருமாறு விளக்குகிறார்.

எண்ணமுடன் இடதுகையால் விபூதிவைத்து
ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி
சொன்னமொழி தவறாமற் சுழியைப்பார்த்து
சுத்தமுடன்

ஓம்கிலி அங்உங்

கென்று
தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத்208
தான்செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால்
முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே
மூர்க்கமுடன் தீருகிற வியாதிகேளே.
கேளப்பா சுரமுடனே சன்னிதீரும்
கெடியான குன்மமுடன் காசந்தீரும்
சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும்
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம்
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப்போகும்
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே.

இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ” என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார்.இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம். இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.
www.supremeholisticinstitute.com