Saturday, November 16, 2019

Keezhanelli herbal medicine

மருத்துவ குணங்கள்தொகு

மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில் கீழாநெல்லி பயன்படுகின்றது.கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி, பூமியாமலக், பூளியாபாலி என்று பல்வேறு பெயர்களால் மருத்துவர்களால் அழைக்கப்படும் கீழாநெல்லி தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தானாகவே முளைத்து செழித்து வளர்ந்திருக்கும் கற்ப மூலிகை ஆகும்.
உட்கொள்ளும் முறை: முழுக் கீழாநெல்லிச் செடியைத் தூயநீரில் கழுவி அரைத்துக் கொள்ளல் வேண்டும்.ஐம்பது கிராம் அளவுள்ள விழுதை 200 மி.லி.எருமைத் தயிருடன் கலந்து, காலை 6 மணியளவில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் தவிராமல் உட்கொண்டால் மஞ்சட்காமாலை நோய் குணமடையும்.மருந்துண்ணும் நாட்களில் மோரும்,மோர்ச்சோறும் உட்கொள்வது நல்லது. கீழாநெல்லி இலைகளக் கற்கண்டுடன் சேர்த்து அரைத்து மூன்று கிராம் அளவு காலை மாலை இருவேளையும் நான்கு நாள் தொடர்ந்து உட்கொள்ள சிறுநீர்த் தொடர்பான நோய்கள் தீரும்.


No comments:

Post a Comment