Wednesday, July 20, 2011

வேம்பு - NEEM BY Dr.VS.Suresh Phd.,

வேம்பு - NEEM
BY Dr.VS.Suresh Phd., Cell : 9884380229 

வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.

நாம் பாட்டுக்கு வெய்யக்காலம் வந்தால் வேப்பிலை வைத்து மாரியம்மன் விழா எடுத்து குளிர்ச்சியாக கம்பன்கூழ் குடித்து கொண்டிருப்போம் .அந்த வேப்பிலைக்கும் ஒரு வேட்டு  வந்தது , எதோ தெய்வாதீனமாக அந்த ஆபத்தில் இருந்து தப்பினோம் .

 நம்ம பறிக்கும் ஒவ்வொரு வ்ர்ப்பிளைக்கும் வெளிநாட்டிற்கு வரி செலுத்த வேண்டி வந்திருக்கும் .

ஏப்ரல், மே (பங்குனி,சித்திரை, வைகாசி) மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அம்மன் கோவில் திருவிழாக்களில் வேப்பிலை ஆடை அணிந்து கோவிலைச் சுற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வேப்பிலை ஒரு கிருமி நாசினி. உடலில் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை. இதனால் பழங்காலத்தில் வெப்ப நோயின் தாக்குதலிருந்து விடுபட்டனர்.

வேப்பிலையின் மருத்துவப் பயன்களை நாங்கள் தான் கண்டுபிடித்தோம் என்று கூறிக் கொண்டு பல அமெரிக்கநிறுவனங்கள் அதற்கு பேடண்ட் வாங்கி வைத்துள்ளன. ஆனால், இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவேப்பிலை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்த செய்தி இதோ !

அமெரிக்க பேடண்ட்களை எதிர்த்து இந்தியா வழக்குத் தொடர்ந்தது. இந்த "கசப்பான" வழக்கில்இந்தியாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

ஐரோப்பாவின் பேடண்ட் அலுவலகத்தில் இதற்கான வழக்கு நடந்தது. வேப்பிலைக்கான காப்புரிமையைஅமெரிக்க பேடண்ட் அலுவலகம் டபிள்யூ.ஆர். கிரேசுக்கு வழங்கியது. இதை எதிர்த்து இந்தியா வழக்குதொடர்ந்தது. இதனை விசாரித்த ஐரோப்பிய பேடண்ட் அலுவலகம் அமெரிக்காவின் உத்தரவை ரத்து செய்தது.

கடந்த 4 வருடங்களாக இந்திய விஞ்ஞானிகள் இந்த உரிமைக்காக பேடண்ட் அலுவலகத்தில் வாதாடி வந்தனர்.இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழலுக்கான ஆராய்ச்சி மையம் (ஆர்.எப்.எஸ்.டி.ஈ.) தான் இந்தவழக்கை கையாண்டு வந்தது. இந்தியாவின் சார்பில் பனாரஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விவசாயத்துறைஆராய்ச்சியாளர் பேராசிரியர் யு.பி. சிங் ஆஜராகி வந்தார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே வேப்பிலையை இந்தியர்கள் மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். திடீரெனஒரு நிறுவனம் வேப்பிலையின் மருத்துவப் பயன்களை தாங்களே கண்டுபிடித்ததாகக் கூறிக் கொள்வதை ஏற்கமுடியாது என சிங் வாதிடார். அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட ஐரோப்பிய பேடடண்ட் அலுவலகம்அமெரிக்காவின் பேடடண்ட் அலுவலக உத்தரவை ரத்து செய்தது.

இந்தத் தீரப்பு குறித்து ஆர்.எப்.எஸ்.டி.ஈயின் இயக்குனர் வந்தனா சிவா கூறுகையில், வேப்பிலை மீதானபேடடண்ட் வழக்கில் இந்தியாவின் நிலையை ஐரோப்பிய பேடடண்ட் அலுவலகம் அங்கீகரித்துள்ளது. இதுஅமெரிக்காவின் வரலாற்றுத் தவறுகளுக்கு நல்ல பாடமாகும். வேப்பிலை மீது பல அமெரிக்க நிறுவனங்கள்பேடடண்ட் வாங்கி வைத்துள்ளன.
அமெரிக்காவின் பேடண்ட் சட்டங்கள் இந்திய மூலிகைகளைத் திருட பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத்தடுக்க இந்திய அரசும் மக்களும் இணைந்து போராட வேண்டும் என்றார்.அவர் .

இப்படிப்பட்ட வேம்பு  எல்லா பாகமும் பயன்படும் மரம் என்பதை சித்தர்கள் அறிந்தனர். அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.

லக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.

வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.வேப்ப எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.

எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர். சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று விடுவதையும் கண்டுள்ளனர்.

நிலத்தின் அமிலத் தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது.வேப்பம் பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக் கட்டுப்படுத்துவதாக சித்திக் ஆலம் என்னும் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
சுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர்.
வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.

வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

வேறுபெயர்கள்
அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி.

  Sanskrit      Nimba
  English       Indian Lilac /
                  Margosa tree
  Hindi          Neem
  Malayalam  Veppu
  Bengali       Nimgachh
  Punjabi       Drekh
  Marathi      Limba
  Urdu          Neem
  Telugu       Vepa
  Kannada     Hebbavu
  Tamil         Vepamaram

மருத்துவப் பண்புகள்

இலை
1)புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.
2)வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.
3)வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.
4)வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.

பூ
பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.
காய் + பழம்
தோல் நோய் தீரும்.

விதை
1)மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.
2)விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.

நெய்
1)தீவிர  புண்கள் தீரும்.
2)ஆராத இரணங்கள் தீரும்.

வேப்பம் பட்டை
1)வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.
2)கஷாயம் குட்டம் தீரும்.
அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை நிர்ணயிக்கும் Chromosomes சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. வேம்பு Chromosome களை பாதிக்காமல் நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

பிசின்
1)மேக நோயைப் போக்கும்.

குறிப்புகள்
பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.

100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.

பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.

வேப்ப கொட்டை  , மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து வளரும்.

வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1 மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை உடையதாகும். விந்து கட்டும்
வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.

நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

வேப்பிலை த்ய்வீக மூலிகையாக கருதப்படுகிறது .

மகாத்மா காந்தி அவரின் ஆரோக்கிய ரகசியமாக வேம்பை கூறுகிறார் .அவரது உணவில் வேம்பு சட்னி தவறாமல் இடம் பெற்றது .

இது புலனடக்கத்திர்க்கும் உகந்தது .

By Dr.VS.Suresh Phd., 

வேம்பு இந்தியா முழுவதும் அனைவரும் நன்கு அறிந்த மரம். தென்னிந்திய மக்களால் தெய்வமாய் போற்றப்படும் . சக்திக்கு உகந்த மூலிகையாக கருதப்படுகிறது .

கிராமத்து மாரியமன் இதர தெய்வங்களின் கோவில்களில் வேம்பு தவறாமல் இடம் பெறும்.
இந்தியர்களின் வாழ்வில் தொன்மைக்காலம் முதல் பின்னி பிணைந்து வரும்
ஒரு மருத்துவ விருஷம் .

வேப்ப மரத்தால் சுகாதார கேடுகளையும் , முருங்கை மரத்தால் பசிப் பிணியும் வராமல் தடுக்கலாம் என்பது நம் முன்னோர் கருத்து. வேப்பமரத்தின் அடியில் அமர்வதும், அதன் மேல் பட்டு வரும் காற்றை சுவாசிப்பதும் மக்களின் மனநிலையை சாந்தமாக்கும். மனம் அமைதி பெறும்.

வேம்பு இக்காலத்தில் உயிர்க்கொல்லி மருந்தாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இதன் தொடக்கம், சிந்துவெளி நதிக்கரை நாகரிக மக்களிடத்துத் தொடங்கியது என்பது, ‘சிந்துவெளி மக்கள் வேப்பிலையைச் சிறந்த மருந்தாக இல்லங்கள் தோறும் பயன் படுத்தி வந்திருக்கின்றனர், என்று அறிஞர் தீட்சித் கூறுவதிலிருந்து அறியமுடிகிறது.

தமிழுக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் முதன்மையான தாகவும் தலை சிறந்ததாகவும் போற்றப் பெறுகின்ற தொல்காப்பியத்துள் வேம்பும் கடுக்காயும் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டதைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

வேம்பும் கடுவும் போல வெஞ்சொல்  எனவரும் செய்யுளுக்கு, ‘முற்பருவத்துக் கைத்துப் பிற்பருவத்து உறுதி பயக்கும் வேம்பும் கடுவும் போல வெய்யவாய சொல்லினைத் தடையின்றிப் பிற்பயக்குமெனக் கருதிப் பாது காத்து' எனப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரை வகுப்பர்.

போர்க்களத்திற்குச் செல்லும் போர்வீரர்கள், மன்னர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள அடையாளப் பூக்களைத் தங்கள் தலையில் சூடிக்கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது.

பழந்தமிழ் வேந்தர்களான சேரன் பனம்பூவும், சோழன் ஆத்திப் பூவும்' பாண்டியன் வேப்பம் பூவும் சூடினர். இம்மூன்று பூக்களும் பூவையர் சூடுகின்ற பூக்களல்ல. இப்பூக்கள் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக் கூடியனவும் அல்ல. கோடைக்காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியதும் மருந்துப் பொருளாகக் கூடியனவுமான இவற்றின் பயன் கருதியே மன்னர்கள் தங்களின் அடையாளப் பூக்களாகக் கொண்டிருக்கின்றனர். வேம்பம்பூவின் தொடர்புவாழ்க்கை' இலக்கியம் ஆகியவற்றிலும் இடங்கொண்டிருக்கிறது எனலாம்.

மனையில் உள்ளவர்கள் நோய்வாய்ப்பட்டாலோ, ஊரில் நோய்க்குறி காணப்பட்டாலோ, நோய்த் தடுப்பு முறையால் மனையையும் மனையைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மைப் படுத்துவர். அதைப் போல வெளிப்புறமிருந்து நோய்க்கிருமிகள் மனைக்குள் புகாமல் மனையைப் பாதுகாக்கும் பொருட்டு, மனையின் முகப்பில்  வேம்பின் இலைகளைக் கொத்துக் கொத்தாகச் செருகி வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

தீங்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ - இரவ மரத்தின் இலையுடன் வேம்பு மனைகளில் செருகப்பட்டதைக் குறிப்பிடக் காண்கிறோம்.

நம் நாட்டின் சாலையோரங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. வீடுகளிலும், கோயில்களிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன.

இதன் உலர்ந்த தண்டின் பட்டைகள், இலைகள், வேர்ப்பட்டைகள் மருந்து தயாரிக்கப் பயன்படுகின்றன. இலைகள் கசப்பு சுவை உடையது. தோல் வியாதிகளுக்கும், பரு, கொப்புளங்கள் இவற்றை குணப்படுத்துவதில் கிருமி நாசினியாகவும் விளங்குகிறது
அழகு சாதனப் பொருள் தயாரிப்பில் சிறந்த கிருமி நாசினியாக சேர்க்கப்படுகிறது. இதன் இலைகள் மற்றும் வேர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியும், தோல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தியும் கொண்டவை. வைரஸ், பூஞ்சை, காளான் போன்ற கிருமிகளுக்கு எதிரானவை.
காற்றில் கலந்து மிதந்து வரும் நுண் கிருமிகளால் வரும் நோய்கள், வேம்பின் இலையால் விலகும். வேப்பிலையை அரைத்து சாற்றை முகப்பருக்களுக்குத் தடவி, உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தால் முகப்பருக்கள் அனைத்தும் உடைந்து காயத் தொடங்கும். வேப்பிலையால் கிருமிகள் எல்லாம் செத்து மடிந்து மண்ணோடு மண்ணாகிவிடும். இது சீதளத்தை விரட்டி உடம்பிற்குத் தேவையான சீதோஷ்ணத்தைக் கொடுத்து சமச் சீராக உடலை வைத்துக் கொள்ளும்.

ஒரு பிடியளவு வேப்பிலையில் கசகசா, கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து மைபோல அரைத்து முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வர அம்மை வடு மாறும். உடலில் ஏற்படும் ஒவ்வாமை நோய்க்கு இதன் இலைச்சாறு நல்ல மருந்து.

பசி குறைந்து உடல் மெலிந்திருப்பவர்கள் வேப்பிலை ஒரு கைப்பிடியில் பூண்டு பத்துப்பல், சீரகம் மூன்று சிட்டிகை சேர்த்தரைத்து இதை இரண்டு பகுதியாக்கி காலை, மாலை இம்மாதிரி 20 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றுப் பிரச்னை தீரும். பசியைத் தூண்டும்.

கட்டி, படை, புண்களுக்கு பற்றாகத் தடவலாம். தண்டு நுனியிலிருந்து வெளிவரும் சாறு வலுவின்மை, தோல் வியாதிகளைப் போக்கும். குளிர்ச்சி தரும். வலுவேற்றும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

மலர்கள் கடுமையான வயிற்று வலியையும் போக்கும் குணம் கொண்டவை. வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டி வைத்தால் தலையில் உள்ள பேன், ஈறு, பொடுகு முதலியவை தீரும். இதை தலையின் உச்சியில் வைத்துக் கட்டினால் தலைபாரம் நீங்கி சுகமாக இருப்பதோடு கூந்தலும் செழித்து வளரும்.

வேப்பம்பூவைக் காய்ச்சி, இந்த கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் நீங்கும். வேப்பம் பூவையும், எள்ளையும் அரைத்துக் கட்டினால் கொடிய கட்டிகளும் உடனே உடைந்துவிடும்.

வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.

சங்ககாலத்தில் ஊர்ப் பொது மன்றங்களில் தான் அனைத்தும் நடைப்பெற்றன.பொது மன்றங்களில் பலா,வேம்பு முதலிய மரங்களின் நிழலில் பாணர்,பொருநர் முதலிய இரவலர்கள் வந்து தங்குதலும்,அங்குள்ள மரங்களில் தம் இசைக் கருவிகளைத் தொங்க விடுதலும் மரபாகும்.இச்செய்தியின்

மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றுய வசிகூடு முழவின்(புறம்,128-1,2)
மன்றப் பலவின் மால்வரை பொருந்தியென் (புறம்,374-15)
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்டளிர் (புறம்,76;4)
மன்ற வேம்பின் ஒண்குழை மலைத்து (புறம்,79;2)
மன்ற வேம்பின் ஒண்பூ வுறைப்ப (புறம்,371;7)

என்னும் புறநானூற்று அடிகள் மூலம் அறியலாம் இங்ஙனம் ஊர்ப்பொது மன்றங்களில் பலர் கூடி வாதிடவும் கல்வி கற்கவும் பயன்படுத்தப் பெற்றிருந்தது என்பதை ஊகிக்க முடிகின்றது. வேம்பின் அடியில் அதிக கூட்டம் கொடிநாள்கூடினாலும் நோய் தொற்றும் வாய்ப்பு இல்லை என்று அன்றைய  VISITING பேராசிரியர்களான ஏழை புலவர்கள் அறிந்திருந்தனர் .
வேப்பம்பூவைக் காய்ச்சி, இந்த கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் நீங்கும்.
.
வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.

 சித்தர்கள் இதன் பெருமைகளை  அறிந்தனர்.பயன்படுத்தினர்  அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.சிறந்த repellent  ஆக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது . வழக்கம் போல் இந்தன் காப்புரிமை அமரிக்க பெற்றுவிட்டது .இப்போது மீட்க போராடி வருகிறோம் .

லக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.

.வேப்ப எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.

எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர். சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று விடுவதையும் கண்டுள்ளனர்.

நிலத்தின் அமிலத் தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது.வேப்பம் பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக் கட்டுப்படுத்துவதாக அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

சுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர்.

விரைவில் விவசாயத்தில் வேம்புவின் பொருகள் உலகெங்கும் லோச்சப்போகிறது  .
வெப்பம் புண்ணாக்கு இந்த பத்து வருடத்தில் பத்து மடங்கு விலை ஏறிவிட்டாது .இனி வரும் காலம்  organi  விவசாயம் வேம்பை பெரிதும் நம்பி இருக்கும் .ஆனால் நாம் மட்டும் இன்னும் சுவாரசியமாக மானாட மயிலாட பார்த்து மழ்திருக்கிறோம் ..

 நமது பாரம்பரிய செல்வங்கள் உலக வணிகர்களால் கொள்ளை போய்  கொண்டு வருகிறது .
வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.

வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.

லக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.

நிலத்தின் அமிலத் தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது.வேப்பம் பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக் கட்டுப்படுத்துவதாக  அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

சுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர்.
வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.

வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

  Sanskrit      Nimba
  English       Indian Lilac /
                  Margosa tree
  Hindi          Neem
  Malayalam  Veppu
  Bengali       Nimgachh
  Punjabi       Drekh
  Marathi      Limba
  Urdu          Neem
  Telugu       Vepa
  Kannada     Hebbavu
  Tamil         Vepamaram

இதன் இலை புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.
வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.
வேப்பிலைச் சாறு மற்றும்  பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.

அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை நிர்ணயிக்கும் Chromosomes சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. வேம்பு Chromosome களை பாதிக்காமல் நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள், வேப்பங்கொழுந்தை நாள்தோறும் வெறும் வயிற்றில் நன்கு மென்று உண்டால் நோய்கட்டுப்படுகிறது. பல் ஈறுகளை வலுப்படுத்துகிறது. அங்கு தொற்றுநோய், வலி போன்றவை ஏற்படாதவாறு காக்கிறது. சிலருக்கு ஒற்றைத் தலைவலி இருந்துகொண்டே இருக்கும். அவர்கள் மஞ்சளுடன் வேப்பிலையையும் சேர்த்து மசிய அரைத்து தலைவலியுள்ள இடத்தில் பற்றுப் போட்டுக்கொண்டால் விரைவில் குணமாகும்.
வேப்பிலை ரத்த சோகையைக் குணப்படுத்தி, சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. சிலருக்கு உடலில்ஒருவித வாசனை இருக்கும். ஒரு வாளி நீரில் வேப்பிலையை 24 மணி நேரம் போட்டுவிட்டு, அடுத்த நாள் அந்நீரில் குளித்தால் வாசனை அகலும். உடலிலே அரிப்பு உள்ளவர்கள், கட்டிகள் உள்ளவர்களும் இதைப் பின்பற்றலாம். குடலில் தங்கியுள்ள புழுக்களை வெளியேற்றுகிறது.

இரத்தத்தைத் தூய்மை செய்து, நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. . தோலின்மீது தோன்றும் அரிப்பு, சிரங்கு, சொரி போன்றவற்றையும் விரைவில் குணப்படுத்துகிறது.
வயிற்றில் ஏற்படும் கோளாறுகளை வலி, ஏப்பம், செரிமானமற்ற நிலை போன்றவற்றை வேப்பம்பூ குணப்படுத்துகிறது.

 வேப்பம்பூவைத் தூய்மை செய்து, நெய்யில் வறுத்து, மிளகு சீரகத் தூளுடன் சிறிதளவு உப்புச் சேர்த்து, சூடாக உள்ள சாதத்தில் போட்டுச் சாப்பிட வேண்டும்.
உலர்ந்த வேப்பம்பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும். காற்று மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம்.

வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து. உடம்பில் ஏற்படும் சன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க சன்னி தீரும்.
அம்மை கண்டவர்களைச் சுற்றி வேப்பிலை கொத்துகளை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும். கிருமியும் நெருங்காது . இன்னும் சொல்வதற்கு மேலும் மேலும் விஷயங்கள் இருக்கு .அதிகம் சொன்னாலும் அது அயர்ச்ச்யை தரும் .

No comments:

Post a Comment